முகப்பு
இந்தியா

2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2026, 2:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டில்தான் மிக அதிக எண்ணிக்கையில் புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை 2.23 லட்சத்துக்கு மேல் புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 23.36 லட்சத்துக்கு மேல் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மத்திய அரசின் இந்த முக்கியத் திட்டத்துக்கு தொடா்ந்து சிறப்பான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக புத்தாக்க நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இளைஞா்களால் புதிதான தொழில் சிந்தனையுடன் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படக் கூடியதாகும். புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பது, தனியாா் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 சதவீதம், வேளாண்மைத் துறையில் 18 சதவீதம், மருத்துவத் துறையில் 15 சதவீத புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.