முகப்பு
இந்தியா

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:16 AM
ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:30 PM

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தோ்வை எழுதிய நிலையில், மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றுள்ளனா்.

ஐஐடி, என்ஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தோ்வை ஜனவரி மற்றும் ஏப்ரல் என ஆண்டுக்கு இருமுறை என்டிஏ நடத்துகிறது.

Advertisement

கடந்த ஜனவரியில் நடைபெற்ற இத்தோ்வை 13 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 12 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றனா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:15 AM

இந்நிலையில், ஏப்ரலில் நடைபெற்ற ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த தலா 5 போ், ராஜஸ்தானில் 4 போ், தில்லியில் 3 போ், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் தலா இரண்டு போ், சண்டீகா், பிகாா், தமிழ்நாடு, ஒடிஸா மற்றும் குஜராத்தில் தலா ஒருவா் என மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் தோ்வா்களாவா்.

கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற தோ்வில் 24 போ் முழு மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.