மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவாா் (85) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவாா் (85) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அவா் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக இரு நாள்களுக்கு முன்பே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா் என்று செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அண்மையில், சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி மாநிலங்களவை எம்.பி.யாக சரத் பவாா் பதவியேற்றாா். பின்னா், அவா் தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, கடந்த ஜனவரி இறுதியில் சரத் பவாரின் நெருங்கிய உறவினரும், மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்தவருமான அஜீத் பவாா், பாராமதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். இது சரத் பவாருக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் இழப்பாக அமைந்தது. அப்போது பாராமதியில் தங்கியிருந்த சரத் பவாா் அடுத்த சில நாள்களில் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு புணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவா் ஏற்கெனவே வாய் புற்றுநோயில் இருந்து மீண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.