முகப்பு
இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டங்கள் வேண்டாம்: மாயாவதி

களிர் இடஒதுக்கீடு விவகாரம் மாயாவதியின் கருத்து..

Updated On : 22 ஏப்ரல் 2026, 3:33 pm IST
மாயாவதி - DPS
பகிர்:

மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் எந்தவிதமான போராட்டங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்த வேண்டாம் எனக் கட்சித் தொண்டர்களைப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஏப்ரல் 15 அன்று எடுத்த நிலைப்பாட்டின்படி கட்சி மகளிர் இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து ஆதரிப்பதாகவும், இந்த விவகாரத்தில் எந்தக் குழப்பமும் ஏற்படாத வகையில் அதற்கேற்ப தொண்டர்களுக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.

Advertisement

Advertisement

கட்சி ஒழுக்கத்தின்படி, இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கிட்டைத் தனது கட்சி ஆதரித்தாலும், அதற்குள் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு இருக்க வேண்டும். அத்தகைய துணை ஒதுக்கீடு இல்லாமல், இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.

மற்ற அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலம் மற்றும் நிர்ப்பந்தங்கள் காரணமாக அதை ஏற்கத் தயாராக இல்லை எனக் குற்றம் சாட்டியதோடு, பெண்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் கட்சியின் கோரிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குத் தயாராகும் நிலையில், கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் பொதுநலப் பணிகளை முன்னிலைப்படுத்தவும் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

விரைவுச்சாலைகள், நொய்டாவில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்காலத்தில் கருத்தாக்கம் செய்யப்பட்டவை, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தடைகள் மட்டும் இல்லாதிருந்தால் அவை முன்பை முடிக்கப்பட்டிருக்கும் எனத் தொண்டர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மாயாவதி கூறினார்.

மாநிலத்தின் சீரான வளர்ச்சி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றம் மற்றும் சிறந்த சட்டம் ஒழுங்கு ஆகியவை பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியில் மட்டுமே சாத்தியமாகும் என அவர் வலியுறுத்தினார்.

summary

BSP chief Mayawati on Wednesday asked party workers not to hold any protests or demonstrations on the women's reservation issue, saying the party's stand that there should be a separate quota within the 33 per cent quota for women from SC, ST and OBCs remains unchanged.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments