FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை 77 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய ஆஸி.!

மகளிர் டி20 உலகக் கோப்பையில் அசத்திய ஆஸ்திரேலிய அணி குறித்து...

Updated On : 17 ஜூன் 2026, 5:17 pm IST
வங்கதேச கேப்டனை விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி. அணியினர். - படம்: ஏஎஃப்பி
பகிர்:

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 9-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

வங்கதேச மகளிரணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக நிகார் சுல்தானா 27 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீசிய கிம் கார்த், சோஃபி மோலினக்ஸ், எல்லீஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Advertisement

Advertisement

வங்கதேசம் சார்பில் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தார்கள். 78 என்ற எளிய இலக்குடன் தனது பேட்டிங்கை செய்துவரும் ஆஸ்திரேலியா 5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது.

பெத் மூனி 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜியார்ஜியோ வோல் அதிரடியாக விளையாடி வருகிறார். எல்லீஷ் பெர்ரி நிதானமாக விளையாடி வருகிறார்.

இந்தப் போட்டியில் வென்றால் ஆஸி. அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். வங்கதேச அணிக்கு இந்தத் தோல்வி பின்னடைவச் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Women's T20 World Cup: Australia restricts Bangladesh to 77 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments