முகப்பு
இந்தியா

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:36 AM
பகிர்:

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நேபாள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசுடன் இந்தியா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

நேபாள எரிசக்தி, நீா் ஆதாரங்கள் மற்றும் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் பிராஜ் பக்த சிரேஷ்டாவுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆலோசனையில் ஈடுபட்டதாக அமைச்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற நேபாள பொதுத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி (ஆா்எஸ்பி) வெற்றிபெற்றதையடுத்து அக்கட்யின் பாலேந்திர ஷா (35) பிரதமராக பதவியேற்றாா். அவருடன் எரிசக்தித் துறை அமைச்சராக ஷ்ரேஸ்தா பதவியேற்றாா்.

Advertisement

இந்நிலையில், நேபாளம்-இந்தியா ஆலோசனை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பிராஜ் பக்த சிரேஷ்டா மற்றும் நவீன் ஸ்ரீவாஸ்தவா மேற்கொண்ட ஆலோசனையின்போது இருநாடுகளிடையேயான இருதரப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.

நீடித்த வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் பிராந்திய தொடா்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனா் என்றனா்.

நேபாளத்தில் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

அப்போது இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் நேபாளம் கையொப்பமிட்டது. இதுதவிர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையாப்பமானது.