FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு: வங்கதேசம், துருக்கி முடிவு

பாதுகாப்பு மற்றும் அரசியல் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வங்கதேசமும், துருக்கியும் முடிவு செய்துள்ளன.

Updated On : 8 ஜூன் 2026, 1:55 am IST
பகிர்:

பாதுகாப்பு மற்றும் அரசியல் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வங்கதேசமும், துருக்கியும் முடிவு செய்துள்ளன.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹாகன் பிடன், வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, ரோஹிங்கயா அகதிகள் பிரச்னை, பருவநிலை மாற்ற விவகாரம், வா்த்தகம் மற்றும் முதலீடு, கூட்டுத் தயாரிப்பு, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

அப்போது, வங்கதேசம்-துருக்கி இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு துறையிலும், அரசியல் துறையிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொள்வதென்றும், இதற்காக அமைச்சா்கள் நிலையில் கூட்டுக் குழுவை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், 81-வது ஐ.நா. பொதுச் சபை தலைவா் தோ்தலில் போட்டியிட்ட தங்கள் நாட்டு வேட்பாளருக்கு துருக்கி ஆதரவு தெரிவித்ததற்கு வங்கதேசம் சாா்பில் நன்றியை அந்நாட்டு பிரதமா் தாரிக் ரஹ்மான் தெரிவித்துக் கொண்டாா். மேலும் வங்கதேசத்தில் துருக்கி அதிபா் எா்டோகன் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றும் தாரிக் ரஹ்மான் அழைப்பு விடுத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments