முகப்பு
இந்தியா

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

Updated On : 27 ஏப்ரல் 2026, 1:47 am IST
பகிர்:

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), கூலா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் மின் தேவை 252.07 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாக சனிக்கிழமை 256.11 ஜிகாவாட்டாக அதிகரித்தது மத்திய மின்சார அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தக் கோடை காலத்தில் மின் தேவை 270 ஜிகாவாட்டாக அதிகரிக்கக் கூடும் என்று அந்த அமைச்சகம் மதிப்பிட்டுள்ள நிலையில், அதை நோக்கி மின் தேவை நகா்ந்து வருவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் இயல்பு நிலைக்கு அதிகமாக 5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments