முகப்பு
இந்தியா

டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி

அமெரிக்காவில் அதிபரின் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து டிரம்ப் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி வாழ்த்து

Updated On : 26 ஏப்ரல், 2026 at 10:18 AM
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு - விடியோ க்ளிப்
பகிர்:

அமெரிக்காவில் அதிபரின் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "வாஷிங்டன் டிசி விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலிலிருந்து அதிபர் டிரம்ப்பும் அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் தப்பித்தனர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.

அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து அளித்தார். இந்த இரவு விருந்தில் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ள்பட சுமார் 2,600 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இரவு விருந்தில் அடையாளம் தெரியாத ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, விருந்தில் பங்கேற்ற அனைவரையும் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக வெளியேற்றினர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரையும் கைது செய்தனர். இந்த விருந்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதிலும், விருந்தினைத் தொடரலாம் என்றே டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகளின் வலியுறுத்தலின்பேரில், விருந்தை பின்னர் மீண்டும் நடத்தவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சம்பவத்தின்போது பாதுகாப்பு அதிகாரிகளின் துரிதமான மற்றும் துணிகரமிக்க செயலையும் டிரம்ப் பாராட்டினார்.

summary

Violence Has No Place In Democracy: PM Modi On Shooting At Trump Event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.