பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
பிரான்ஸில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் டிரம்ப், மோடி பங்கேற்பு பற்றி...
பிரான்ஸில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளவுள்ளார்.
கிழக்கு பிரான்ஸில் உள்ள எவியான்-லெஸ்-பெய்ன்ஸில் நகரில் வருகின்ற ஜூன் 15 முதல் 17 வரை ஜி7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 80-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அவர் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளதாக அமெரிக்காவின் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஜி7 மாநாட்டில் ஈரான் போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட செய்யறிவு கருவிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, முக்கிய கனிம விநியோகச் சங்கிலிகள் மீதான சீனாவின் பிடியைக் குறைக்க ஒப்புக்கொள்வது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்துப் போராடுவது, அமெரிக்க ஏற்றுமதியை ஊக்குவிப்பது மற்றும் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக டிரம்ப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், முக்கியத்துவம் வாய்ந்த ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
US President Trump to attend G-7 meet in France - Modi Also Invited
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.