முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

மேற்கு வங்க 2 ஆம் கட்ட வாக்குப் பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 91% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஏப்ரல் 2026, 9:13 pm IST
வாக்காளர்கள் - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்கத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 91% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று (ஏப். 29) காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மாலை 6 மணிக்குப் பிறகு சில இடங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 91% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.

summary

West Bengal records over 91 per cent voter turnout till 6 pm amid sporadic violence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.