மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 18.76% வாக்குப்பதிவு- நேரலை
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Updated On : 23 ஏப்ரல், 2026 at 10:36 AM
ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு பலத்துடன் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.
Updated On : 23 ஏப்ரல், 2026 at 10:27 AM
18.76% வாக்குப்பதிவு
summary
மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Advertisement
வட வங்காளம் மற்றும் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 152 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.