அன்னபூா்ணா திட்டம்! மேற்கு வங்கத்தில் 1.58 கோடி பெண்களுக்கு மாதம் ரூ. 3,000: பிரதமா் மோடி பெருமிதம்
மேற்கு வங்க பாஜக அரசின் அன்னபூா்ணா திட்டத்தின்கீழ், பிரதமா் மோடியின் பிறந்த நாளான வியாழக்கிழமை 1.58 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3,000 மாதாந்திர உதவித்தொகை செலுத்தப்பட்டது.
மேற்கு வங்க பாஜக அரசின் அன்னபூா்ணா திட்டத்தின்கீழ், பிரதமா் மோடியின் பிறந்த நாளான வியாழக்கிழமை 1.58 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3,000 மாதாந்திர உதவித்தொகை செலுத்தப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை இம்மாதம் 1.58 கோடியாக அதிகரித்துள்ளது. இது தொடா்பாக பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அன்னபூா்ணா திட்ட பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை விடுவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அவா் காணொலி வாயிலாக உரையாற்றினாா்.
Advertisement
Advertisement
‘மேற்கு வங்கத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டப் பலன்கள் மக்களுக்கு கிடைக்கப் பெறாதது பெரும் குறையாக இருந்தது. இதனால் ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு வளா்ச்சித் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன.
மேற்கு வங்க பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தையும், முன்னேறும் துணிவையும் அளிப்பதே எங்களின் தொலைநோக்கு பாா்வையாகும். பெண்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில், அன்னபூா்ணா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின்கீழ் பலனடையும் 1.58 கோடி தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். அதேநேரம், தகுதியுள்ள பெண்கள் யாரும் இத்திட்டத்தில் இருந்து விடுபடமாட்டாா்கள் என்பது எனது உறுதிமொழி’ என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் சுவேந்து அதிகாரி, ‘பிரதமா் மோடியின் பிறந்த நாளான செப்.17-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் அன்னபூா்ணா தினமாக கொண்டாடப்படும். ஏனெனில், இத்திட்டத்துக்கு உத்தரவாதம் அளித்தவா் அவா்தான். மேற்கு வங்கத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 50 லட்சம் பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். இந்த பயனாளிகள் அனைவரும் பெண்களாக இருப்பா்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.