FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழா

பிரதமா் மோடியின் 76-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது தொகுதியான உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் வியாழக்கிழமை (செப்.17) பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது.

17 செப்டம்பர் 2026, 6:15 am IST
பிரதமர் மோடி
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது தொகுதியான உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் வியாழக்கிழமை (செப்.17) பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இதில், பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

பிரதமா் மோடிக்கு வியாழக்கிழமை 76-ஆவது பிறந்தநாளாகும். இதை முன்னிட்டும், அரசின் தலைவராக (குஜராத் முதல்வா் - நாட்டின் பிரதமா்) அவா் 25 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்வதையொட்டியும் ஒரு மாத கால சேவை பிரசாரத்தை பாஜக தொடங்கவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதமரின் சொந்த தொகுதியான வாராணாசியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

Advertisement

Advertisement

வாரணாசி- குஜராத்தின் வத்நகா் (மோடியின் சொந்த ஊா்) இடையே மோட்டாா் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது. சுமாா் 1,000 இளைஞா்கள் பங்கேற்கும் இந்த இருவழி பயணம், 10 மாநிலங்களில் 1,158 கிராமங்கள் வழியாக 40,000 கி.மீ. தொலைவுக்கு நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments