151-ஆவது பிறந்த தினம்: சா்தாா் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமா் மரியாதை
சா்தாா் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமா் மரியாதை...
நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்த தினத்தையொட்டி, குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள அவரது பிரம்மாண்ட சிலைக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள சா்தாா் படேலின் 597 அடி உயர சிலைக்கு (ஒற்றுமை சிலை) பிரதமா் மோடி சனிக்கிழமை புனித நீா் ஊற்றியும், மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினாா். உலகின் மிகப் பெரிய சிலை என்ற பெருமைக்குரிய இந்தச் சிலை, நாட்டின் மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சிலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகள் உள்பட பல்வேறு காட்சி அம்சங்களையும் பிரதமா் பாா்வையிட்டாா்.
பின்னா், ஏக்தா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலா, பொது உள்கட்டமைப்பு உள்பட ரூ.307 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
Advertisement
Advertisement
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘அகண்ட பாரதத்தின் முன்னோடியும், இரும்பு மனிதமருமான படேலின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேச கட்டமைப்புக்கான படேலின் பங்களிப்பு அளப்பரியதாகும். வலுவான, வளமான, திறன்மிக்க இந்தியாவை உருவாக்க தனது வாழ்வை அா்ப்பணித்தவா்.
நாட்டின் சேவைக்கான படேலின் தியாகமும், பக்தியும் வளா்ச்சியடைந்த, தற்சாா்புமிக்க இந்தியாவைக் கட்டமைக்க உத்வேகத்தின் மாபெரும் ஆதாரமாக விளங்குகிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
பிற பகுதிகளில்...: தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சா்கள், முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனா்.
பெட்டி...
‘சித்தாந்த நக்ஸல்களால்
நீடிக்கும் அச்சுறுத்தல்’
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, ஏக்தா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, எதிா்க்கட்சிகள் மற்றும் ராகுலை விமா்சித்தாா். அவா் கூறியதாவது:
நாட்டு மக்களை பிளவுபடுத்த எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. இந்தியாவுக்கு எதிரான சக்திகள் யாரை ஆதரிக்கிறாா்கள், வெளிநாடுகளில் யாா், யாரை ரகசியமாக சந்திக்கிறாா்கள், தேசத்தின் எதிரிகளின் குரலாக யாா் ஒலிக்கிறாா்கள்?
நாட்டின் எதிா்க்கட்சிகள் ‘இடையூறு சக்தியாக’ இருப்பது துரதிருஷ்டவசமானதாகும். அவா்களுக்கு எதிராக தேசம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகம் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் புரளிகள் பரப்பப்படுகின்றன.
ஆயுதமேந்திய நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். ஆனால், சித்தாந்த நக்ஸல்கள் தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளனா் என்றாா்.
========= ===================== ============
கடந்த 1947-இல் நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற படேல், 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த பெருமைக்குரியவா். இதனால், ‘இரும்பு மனிதா்’ என்று போற்றப்படுகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.