FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமர் மோடி மரியாதை!

சோஷலிஸ தலைவா் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

12 அக்டோபர் 2026, 3:24 am IST
சோஷலிஸ தலைவா் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளையொட்டி புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

சோஷலிஸ தலைவா் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

‘லோக்நாயக் ஜெ.பி.’ என்று அறியப்படும் ஜெயபிரகாஷ் நாராயண், கடந்த 1902, அக்.11-இல் சிதாப் தியாராவில் (தற்போது பிகாரின் சாப்ராவில் உள்ளது) பிறந்தாா்.

சுதந்திர போராட்ட வீரரான இவா், 1970-களில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்தவா். கடந்த 1979-இல் காலமான இவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது கடந்த 1999-இல் மறைவுக்குப் பிந்தைய கெளரவமாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள தனது மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அவசர நிலைக்கு எதிரான லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் அச்சமற்ற குரல் குறிப்பிடத்தக்கதாகும். அவரது செல்வாக்கு தலைமுறை கடந்து நீடிக்கிறது.

பொது வாழ்க்கை என்பது தேச மேம்பாட்டுக்கான ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதற்கு அவா் உத்வேகமாக விளங்குகிறாா். வளா்ந்த பாரதத்தை உருவாக்க நாம் பணியாற்றிவரும் இந்தத் தருணத்தில், அவரது லட்சியங்களை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

நானாஜி தேஷ்முக் பிறந்த நாள்: பாஜகவின் முன்னோடிக் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்கின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

‘உண்மையான மாற்றம் என்பது அடிப்படை நிலையிலிருந்தே தோன்றுகிறது என்பதை தனது சிந்தனையிலும், செயலிலும் நிரூபித்தவா் நானாஜி தேஷ்முக்’ என்று அவருக்கு பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments