காந்தி பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை...
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், தில்லி முதல்வர் ரேகா குப்தா, தில்லி ஆளுநர் தரண்ஜித் சிங் உள்ளிட்டோரும் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
President, PM Modi and others pays tribute to Mahatma Gandhi at Rajghat Gandhi Jayanti
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.