பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால் தான் பதவியில் நீடிக்கிறார்: ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உதவியால் தான் பதவியில் நீடிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உதவியால் தான் பதவியில் நீடிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
மேலும், வெளிநாடுகளின் சவால்களுக்கு நாம் தீர்வு காண முயன்று வரும் வேளையில், நாட்டிற்குள்ளேயே சில சக்திகள் நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகப் பிரதமர் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
அதேநேரம், ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களைக் குறிக்கும் வகையில் பேசிய மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாடுகளில் யாரையெல்லாம் ரகசியமாகச் சந்திக்கிறார்கள் என்றும், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் யாருக்கு ஆதரவளிக்கின்றன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அதில், “மோடி அவர்களே. நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். நீங்களே வெளிநாட்டு உதவியால்தான் பிரதமரானீர்கள். வெளிநாட்டு உதவியால் தான் தொடர்ந்து பிரதமராக நீடிக்கிறீர்கள்.
உங்களில் நிதி அமைப்பு வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் முழுக்க உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன.
இதுகுறித்து வெளிப்படையான விவாதத்திற்கு நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலும் , எந்த நேரத்திலும் இதைப்பற்றி விவாதிக்கலாம். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் வாருங்கள்.
இதற்கு நீங்கள் துணிய மாட்டீர்கள். ஏனெனில், உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைக் கண்டு உங்களுக்கு பயம்” என்று தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi has alleged that PM Modi remains in power only due to foreign assistance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.