சமரசம் செய்யும் பிரதமரால் இதில் பங்கேற்க முடியாது: பாஜக அரசை விமர்சித்த ராகுல்
காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால், அமெரிக்கா - சீனா - ரஷியா இடையிலான சந்திப்பில் இந்தியாவும் பங்கேற்றிருக்கும் என ராகுல் கூறியது குறித்து...
காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால், அமெரிக்கா - சீனா - ரஷியா இடையிலான சந்திப்பில் இந்தியாவும் பங்கேற்றிருக்கும் எனக் கூறி, பாஜக அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா அதிபா் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் இடையே முதல்முறையாக வியாழக்கிழமை முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஐ.நா. சீா்திருத்தங்கள், எரிபொருள் விநியோகத்தை அதிகரித்தல், அணு ஆயுதங்களுக்கு எதிராக பேச்சுவாா்த்தை உள்ளிட்டவை தொடா்பாக மூவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இது தொடா்பாக கூட்டுப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த முத்தரப்பு சந்திப்பைக் குறிப்பிட்டு மத்திய பாஜக அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராகுல் காந்தி சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தச் சந்திப்பில் இந்திய பிரதமரும் பங்கேற்றிருந்திருப்பார்.
ஆனால், சமரசம் செய்துகொண்ட பிரதமரால் (மோடி) ஒருபோதும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.