FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராஜீவ் மடியில் சோனியா... ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பதிவிட்ட சோனாக்‌ஷி சின்ஹா!

ராகுல் காந்தியை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு நடிகை சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில் குறித்து...

6 வினாடிகள் முன்பு
ராகுல் காந்தி, ராஜீவ் - சோனியா கந்தி, சோனாக்‌ஷி சின்ஹா. - படங்கள்: எக்ஸ் / சோனியா காந்தி, இன்ஸ்டா / சோனாக்‌ஷி சின்ஹா.
பகிர்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் கடந்த நவ.10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.

இந்தப் புத்தகத்தில், சோனியா காந்தியின் இளமைப்பருவம், காதல், தனிப்பட்ட வாழ்க்கை, உடல் நலம், ராஜீவ் காந்தி, குழந்தைகள், இந்திரா காந்தி, அரசியல் வாழ்வு என பல விவகாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இப்புத்தகம் விற்பனைக்கு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நவ. 16ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசியது பிஜேபியினரிடம் சர்ச்சையானது.

இந்த நிகழ்வில், “ஒவ்வொரு மதிய உணவுக்கும் எனது தந்தையின் மடியில் எனது தாய் உட்கார்ந்து உணவு உண்பார். இது வழக்கமானது என்று நான் இருந்தேன். எனது நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும்போது அப்படி இல்லை. நண்பர்களிடம், ‘ஏன் உங்களது அம்மா, அப்பாவின் மடியில் உட்காரவில்லை?’ எனக் கேட்டேன்.

திடீரென எல்லாமே மாறிவிட்டது. இந்திரா காந்தி சுடப்பட்டார். அடுத்ததாக எனது அப்பா உடல் சுக்குநூறாக வெடித்தது” எனப் பேசினார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் மாற்று அரசியல் கருத்துடன் இருப்பவர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்தன. இதற்காக நவ.17ஆம் தேதி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கடவுள் பார்வதி, சிவன் மடியில் இருக்கும் கர்நாடகத்தின் 12ஆம் நூற்றாண்டின் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

சோனாக்‌ஷி தனது இன்ஸ்டாவில் வோமேனியா என்ற பக்கத்தின் பதிவைப் பகிர்ந்து கிண்டலாக பதில் அளித்துள்ளார். அந்தப் பதிவில் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பினை விமர்சித்தும் எழுதப்பட்டிருந்தன.

இதனைப் பகிர்ந்த சோனாக்‌ஷி தனது மகன்களுக்கு அறிவுரை சொல்வது போல, “அட, என் வருங்கால குழந்தைகளுக்கு அவர்களது வழியில் என்னவெல்லாம் வருமோ என்று தெரியவில்லை. தயாராக இருங்கள் மகன்களே (தற்போது எங்கே இருக்கிறீர்கள்?)” எனக் கூறியுள்ளார்.

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா 2024ல் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு இன்னும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத நிலையில், தனது வருங்கால குழந்தைகள் இதுபோல பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.

summary

Actor Sonakshi Sinha reacts to Rahul Gandhi's 'lap remark' row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.