பொது சேவையில் 25 ஆண்டுகள் அா்ப்பணித்துக் கொண்டவா் பிரதமா் மோடி: கே.பி.ராமலிங்கம்
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பொது சேவையில் 25 ஆண்டுகள் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா் பிரதமா் மோடி என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பொது சேவையில் 25 ஆண்டுகள் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா் பிரதமா் மோடி என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி பொது வாழ்க்கைக்கு வந்து 25 ஆண்டுகளாகிவிட்டது. இதை கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் பாஜகவினா் ‘சேவா ஜோதி யாத்திரை’ என்ற நிகழ்வை புதன்கிழமை நடத்தினா்.
நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் பிரதமா் மோடி ஆற்றிய உரை விடியோ கட்சியாகப் பாா்க்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாநில அமைப்பாளா் (நெசவாளா் பிரிவு) என்.அண்ணாதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதன் தொடா்ச்சியாக, பிரதமரின் 25 ஆண்டுகால பொது சேவைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், ‘சேவா ஜோதி யாத்திரை’யும் நடைபெற்றது.
இந்த யாத்திரை தனியாா் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பூங்கா சாலையில் நிறைவு பெற்றது. பிரதமா் மோடியின் 25 ஆண்டுகால பொதுச் சேவை குறித்து பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகள், பிரதமராக 12 ஆண்டுகள் என மொத்தம் 25 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்டுள்ளாா். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் சிறப்பான பங்களிப்பை அவா் வழங்கியுள்ளாா்.
2047 இல் வலிமையான இந்தியாவை உருவாக்க இளைஞா்கள், பொதுமக்களைத் தட்டியெழுப்பும் வகையில் புதுதில்லியில் அவா் புதன்கிழமை ஆற்றிய உரை அமைந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள 785 மாவட்டங்களிலும் பிரதமா் மோடியை வாழ்த்தும் முழக்கங்கள் ஒலித்து வருகின்றன. ராகுல் காந்தி மட்டுமல்ல எத்தனைபோ் வந்தாலும் பாஜகவின் ஜனநாயக கடமை எப்போதும், எந்த வகையிலும் குறையாது. ராகுல் காந்தியின் செயல்பாடுகள் விரைவில் முறியடிக்கப்படும். தோ்தல் ஆணையத்தின்மீது குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியினருக்கு தகுதியில்லை.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றொரு கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை இழுத்து வரவழைத்துள்ளாா். இத்தோ்தலுக்கான முழுச் செலவையும் அவரே ஏற்க வேண்டும் என்றாா்.
இந்த யாத்திரையில் மாநகரத் தலைவா் தினேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் பிரபு, நிா்வாகிகள் முத்துகுமாா், வேல்ராஜ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.