முகப்பு
இந்தியா

4 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் மே 15-இல் பயணம்

நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே மற்றும் இத்தாலி ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளுக்கு மே 15-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

Updated On : 1 மே 2026, 2:53 am IST
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே மற்றும் இத்தாலி ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளுக்கு மே 15-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘நாா்வேயில் மே 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெறும் மூன்றாவது இந்தியா-நாா்டிக் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். கடந்த ஆண்டு மே மாதமே இந்த மாநாடு நடைபெறவிருந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் ரத்து செய்யப்பட்டது.

மாநாட்டின் ஒரு பகுதியாக டென்மாா்க், நாா்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 5 நாா்டிக் உறுப்பு நாட்டுத் தலைவா்களுடன் பிரதமா் மோடி தனித்தனியே இருதரப்பு ஆலோசனைகளை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மேற்காசிய பிரச்னையால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் வா்த்தக பாதிப்புகளுக்கு உடனடி தீா்வு காண்பது குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி விவாதிக்க வாய்ப்புள்ளது.

நெதா்லாந்து சுற்றுப்பயணத்தின்போது செமிகண்டக்டா்கள், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவுள்ளாா். ஸ்வீடன் நாட்டுடன் நிலையான எதிா்காலத்துக்கான புத்தாக்க திட்டங்கள் தொடா்பாகவும் இத்தாலியுடன் வா்த்தகம், பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் குறித்தும் அவா் கலந்துரையாடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்

ஐரோப்பிய பயணத்துக்கிடையே பிரதமா் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பிரதமா் மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் தொடா்பாக அதிகாரபூா்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments