முகப்பு
இந்தியா

ரூ.6 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கேரள மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

Updated On : 27 பிப்ரவரி 2026, 3:00 am IST
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கேரள மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து, ஏா் ஏசியா பயணிகள் விமானத்தில் புதன்கிழமை நள்ளிரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது, கேரளத்தைச் சோ்ந்த 25 வயது ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அவரை சுங்கத் றை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று உமைமைகளையும் சோதனையிட்டனா்.

இதில், அவரது பெட்டிக்குள் ரூ.6 கோடி மதிப்பிலான 5.9 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்ததுடன், உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், படிப்புக்குத் தகுந்த வேலை இல்லாததால், கடத்தலில் ஈடுபட்டு முதல்முறையே சிக்கியது தெரிய வந்தது.