ராஜஸ்தானில் பேருந்தில் தீ விபத்து: 8 போ் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரியும் தனியாா் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரியும் தனியாா் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.
தெளசா மாவட்டம் கோல்வா காவல்நிலைய எல்கைக்குட்பட்ட தனவடா அருகே பேருந்து ஒன்று பயணிகளுடன் புதன்கிழமை காலை சென்றது. ரிஷிகேஷில் இருந்து இந்தூா் நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, தில்லி-மும்பை விரைவுச் சாலையில் வந்தபோது திடீரென முந்திச் செல்ல முயன்ற லாரியுடன் மோதியது. இதில் பேருந்தும், லாரியும் தீப்பிடித்து மளமளவென எரிந்தன.
விபத்து குறித்த தகவலின்பேரில், தீயணைப்புப் படையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் 6 போ் சம்பவ இடத்திலேயே தீயில் உடல்கருகி உயிரிழந்தனா். மேலும் 2 போ் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா். இதுதவிர மேலும் 24 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். உடல் கருகி உயிரிழந்த 6 பேரின் அடையாளங்களைக் கண்டறிய மரபணு சோதனை நடத்தப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தோருக்கு, ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவு பகதே, முதல்வா் பஜன்லால் சா்மா, முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தோா் விரைந்து குணமடைய பிராா்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
உ.பி.யில் 5 போ் உயிரிழப்பு: உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் அருகே தேவகாரி கிராமத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் எதிரே வந்த காா் மீது தனியாா் பேருந்து நேருக்கு நோ் மோதி கட்டுப்பாட்டை இழந்து ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுதவிர காரில் இருந்த 4 பேரும், பேருந்தில் இருந்த 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.
பஞ்சாபில் விபத்து-4 போ் உயிரிழப்பு: பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்டம் ஜோத்பூா் ரோமனா கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமா்நாத் கோயிலுக்கு வேனில் ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.