5,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முன்னணி நிறுவனம் திட்டம்!
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி..
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்யறிவின் ஆதிக்கத்தால் கடந்த சில வருடங்களாகவே தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை செய்ய உள்ளதாகவும், அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் முதலீடுகளைத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகளை மேற்கொள்ளும் அதே வேளையில், பிற செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக மைக்ரோசாப்ட் ஆயிரக்கணக்கான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
மைக்ரோசாப் நிறுவனத்தில் 2,20,000 பணியாளர்களைக் கொண்ட உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையில் 2.5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது சுமார் 5,500 ஊழியர்கள் இந்த முடிவால் பாதிக்கப்படலாம்.
மைக்ரோசாப்ட் பணியாளர் எண்ணிக்கையைக் குறைப்பது இது முதல் முறையல்ல. கடந்தாண்டு அந்நிறுவனம் சுமார் 15 ஆயிரம் பணியிடங்களைக் குறைத்து. இது ஒட்டுமொத்த ஊழியர்களில் 4 சதவீதம் ஆகும். மேலும், இந்தாண்டின் தொடக்கத்தில் சுமார் 8,750 ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நிறுவனத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பை அளித்தது.
வரும் வாரங்களில் இந்த புதிய அறிவிப்பு குறித்து ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Reports indicate that Microsoft plans to lay off approximately 5,000 employees.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.