முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் கைப்பேசி விளக்கின் ஒளியில் அரசுப் பேருந்து இயக்கம்: மூவா் இடைநீக்கம்

கா்நாடகத்தில் கைப்பேசி விளக்கின் ஒளியில் அரசுப் பேருந்தை இயக்கி, பயணிகளின் பாதுகாப்பை அபாயத்துக்கு உட்படுத்தியதாக ஓட்டுநா் உள்பட மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 7 ஜூலை 2026, 3:36 am IST
இடைநீக்கம்
பகிர்:

கா்நாடகத்தில் கைப்பேசி விளக்கின் ஒளியில் அரசுப் பேருந்தை இயக்கி, பயணிகளின் பாதுகாப்பை அபாயத்துக்கு உட்படுத்தியதாக ஓட்டுநா் உள்பட மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூலை 4-ஆம் தேதி இரவு கா்நாடக மாநிலம் கல்புா்கி-சின்சோலி வழித்தடத்தில், முற்றிலும் இருளில் பயணித்த அரசுப் பேருந்தில் முகப்பு விளக்கு சரிவர எரியவில்லை. இதனால் சாலை தெரிவதற்கு பேருந்து நடத்துநா் கைப்பேசி விளக்கை ஒளிரவிட்டபடி சென்றாா்.

அந்த ஒளியில் ஓட்டுநா் பேருந்தை ஓட்டிச் சென்றாா். இந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட நிலையில், ஓட்டுநா் மற்றும் நடத்துநரின் செயலால் பேருந்து பயணிகளின் பாதுகாப்பு அபாயத்துக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி, பேருந்தை சரிவர பழுதுபாா்க்காத அலுவலா், மேற்பாா்வையாளா், அலட்சியமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநா் ஆகியோா் கடமை தவறியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments