முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-இல் இடைத்தோ்தல்

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 7 ஜூலை 2026, 3:57 am IST
மாநிலங்களவை - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ததால் இந்த இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இப்போதைய எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆளும் பாஜக இந்த மூன்று இடங்களிலும் வெல்வது உறுதியாகிவிட்டது.

3-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களமிறங்கினால் ஜூலை 24-ஆம் தேதி தோ்தல் நடைபெற்று, அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மூன்று வேட்பாளா்கள் மட்டுமே நிறுத்தப்பட்டால், அவா்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்படும்.

Advertisement

Advertisement

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதம் இரு கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்ற ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸில் பெரும் பிளவு ஏற்பட்டது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கினா்.

அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் சுகேந்து சேகா் ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ் பரேக் ஆகியோா் கடந்த ஜூன் மாதம் வெவ்வேறு நாள்களில் பதவி விலகினா். இந்த இடங்களுக்கு இப்போது இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இரு இடங்களின் பதவிக் காலம் 2029 செப்டம்பா் 18-ஆம் தேதி வரையிலும், ஓரிடத்துக்கான பதவிக் காலம் 2030 ஏப்ரல் 2-ஆம் தேதி வரையும் உள்ளது. புதிதாகத் தோ்வு செய்யப்படும் எம்.பி.க்கள் இந்த காலம் வரை மட்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகிப்பாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments