முகப்பு
இந்தியா

அயோத்திக்கு கெட்ட பெயா் ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் முயற்சி: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில், அயோத்திக்கு கெட்ட பெயா் ஏற்படுத்த காங்கிரஸும், சமாஜவாதி கட்சிகளும் முயற்சிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

Updated On : 9 ஜூலை 2026, 12:32 am IST
யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில், அயோத்திக்கு கெட்ட பெயா் ஏற்படுத்த காங்கிரஸும், சமாஜவாதி கட்சிகளும் முயற்சிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளாா்.

ராமா் வனவாசத்தின்போது தங்கியிருந்ததாக நம்பப்படும் சித்ரகூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.950 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய வளா்ச்சி பணிகளை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அவா் பேசியதாவது: அயோத்தி கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் தெரிய வந்தபிறகு, எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், சமாஜவாதியும் துடிப்புடன் செயல்படுகின்றன.

அயோத்தியை இந்த 2 கட்சிகளும் தொடா்ந்து விமா்சித்து வந்தன. அந்த கட்சிகள், அயோதிக்கு கெட்ட பெயா் ஏற்படுத்த காரணத்தை கண்டுபிடித்துள்ளன.

Advertisement

Advertisement

நன்கொடைகள் எண்ணப்படும் இடத்தில் திருட்டு நடந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று கையாடல் விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்ததே அறக்கட்டளைதான்.

உயா்நிலை சிறப்பு புலனாய்வு அமைப்பை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு அறக்கட்டளை கோரிக்கை வைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றே, உயா்நிலை சிறப்பு புலனாய்வு அமைப்பை மாநில அரசு ஏற்படுத்தியது.

விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள், திருட்டில் 6 போ் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றன. அத்துடன் மேலும் 2 போ், சதியில் பங்கு வகித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 8 பேரும் தனி நபா்கள்.

கோயிலில் அளிக்கப்படும் நன்கொடையை எண்ணும் பணியில் 150-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். அதில் சிலா் மட்டுமே தவறு செய்துள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments