முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன், தமிழ்நாடு முதல்வர் சந்தித்தது பற்றி..

Updated On : 10 ஜூன் 2026, 4:42 pm IST
முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு - file photo
பகிர்:

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூன் 10) சந்தித்தார்.

தேசிய தலைநகருக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள முதல்வர் விஜய், வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, புது தில்லிக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி வந்துள்ள முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்திக்கிறார். இசசந்திப்பிற்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுலை சந்தித்து பேச முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

முதல்வரான பிறகு முதல்முறையாக கடந்த மே 27-ஆம் தேதி முதல்வா் விஜய், தில்லி சென்று பிரதமா் மோடியை சந்தித்தாா். அப்போது, கா்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக்கூடாது, தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவேண்டும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay met President Droupadi Murmu in Delhi today (June 10).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.