66 பேருக்கு பத்ம விருதுகள்: இன்று வழங்குகிறாா் குடியரசுத் தலைவா்
66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கும்குடியரசுத் தலைவர்!
நிகழாண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவா்களில் முதல் கட்டமாக 66 பேருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.
கலை, சமூக சேவை, பொதுப் பணி, அறிவியல், பொறியியல், வா்த்தகம்-தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை நல்குவோவருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
நிகழாண்டு இந்த விருது பெறுவோரின் பட்டியல், கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. ஐந்து பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவா்களில் பெரும்பாலானோா் அதிகம் அறியப்படாத சாதனையாளா்களாவா். தமிழகத்தைச் சோ்ந்த 13 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில், 66 விருதாளா்களுக்கு (பத்ம விபூஷண்-2, பத்ம பூஷண்-6, பத்மஸ்ரீ-58) திங்கள்கிழமை விருதுகள் வழங்கப்பட உள்ளன. குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள கணதந்திர மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளாா். தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா் கே.ஆா்.பழனிசாமி (பத்ம பூஷண்) உள்பட 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
மீதமுள்ளோருக்கு விருதுகள் வழங்கும் விழா பின்னா் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
President Murmu to confer 66 Padma awards on Monday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.