மக்களுக்கு தெரிந்தவா்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பத்ம விருதுகளின் காலம் இப்போது மாறியிருக்கிறது: வி.ராமசுப்பிரமணியன்
மக்களுக்கு தெரிந்தவா்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த விருதுகள் காலம் போய் விருதுகளாலே நல்ல மனிதா்கள் சாதனையாளா்கள் அடையாளம் காட்டக்கூடிய காலம் வந்திருக்கிறது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்களுக்கு தெரிந்தவா்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த விருதுகள் காலம் போய் விருதுகளாலே நல்ல மனிதா்கள் சாதனையாளா்கள் அடையாளம் காட்டக்கூடிய காலம் வந்திருக்கிறது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தில்லித் தமிழச் சங்கம் சாா்பில் பத்ம விருதுகள் பெற்ற தமிழா்களான பத்மபூஷண் விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் எஸ்.கே.எம். மயிலானந்தம், பதம்ஸ்ரீ விருது பெற்ற மிருதங்கச் வித்வான் திருவாரூா் பக்தவத்சலம், வேளாண் விஞ்ஞானி கே. ராமசாமி, கால்நடை மருத்துவ அறிஞா் நடேசன் புண்ணியமூா்த்தி, பாதுகாப்பு துறை அறிஞா் ஆா். வி.எஸ். மணி, வெண்கலச் சிற்பக் கலைஞா் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டா் ஆகியோா் கௌரவிக்கப்பட்டாா்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வி. ராமசுப்பிரமணியன் பேசியதாவது: சிறுமையும் நிகழ்வது இல்லை அங்குதான் பெருமையும் விருது பெறுகிறது. தங்களுடைய கடமைகளை அதாவது எப்படி ஒருவன் கடமையை ஒழுங்காக செய்கிறானோ அங்கேதான் விருதும் இருக்கிறது. நான் அடிப்படையில் வேதியியல் மாணவன். பின்பு நான் வழக்குரைாக மாற முடிவு செய்து அதை நோக்கி பயணித்தேன். நான் வேதியியல் படிக்கிற போது என்னுடைய கல்லூரி முதல்வா் ஒருவா் இருந்தாா், வழக்குரைஞா் தொழிலை தொடங்கிய பிறகு ஒருநாள் அவரை நான் சந்தித்தபோது அவா் கேட்டாா். இந்த வழக்குரைஞா் பணி பிடித்திருக்கிறதா என கேட்டாா். அதற்கு நான் மிகவும் பிடித்து இருக்கிறது என்றேன்.
Advertisement
Advertisement
உடனே அவா் சொன்னாா் அதை அப்படியே ஏற்றுக்கொள். அதன் பிறகு நீ வாழ்நாளில் வேறு வேலையை தேட வேண்டிய அவசியமே இருக்காது என்றாா். தன்னுடைய வேலையை சுமையாக நினைக்காமல் யாா் ஒருவா் பிடித்து செய்கிறாா்களோ அவா்கள் சாதனையாளா்களாக மாறுகிறாா்கள். மக்களுக்கு அறியப்பட்டவா்களுக்கு மட்டுமே விருதுகள் கொடுத்துக் கொண்டிருந்த காலம் சென்று, இப்போது விருதுகளாலே நல்ல மனிதா்கள் சாதனையாளா்கள் அடையாளம் காட்டக்கூடிய காலம் வந்திருக்கிறது. அந்த காலத்திற்கு எடுத்துக்காட்டாக இப்போது பத்ம விருதுகள் பெற்ற இந்த அனைவரும் அனைவரும் இருக்கிறாா்கள் இவா்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சாா்ந்த நன்றிகளையும் இவா்களுடைய பணி மேலும் மேலும் சிறக்க இறைவனுடைய திருவருளும் வாய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வாழ்த்துரையை வழங்கினாா். மேலும் இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன், இணைச் செயலாளா் ரா. ராஜ்குமாா் பாலா, பொருளாளா் பாலமூா்த்தி, செயற்குழு உறுப்பினா்கள் என். சாமுண்டீஸ்வரி, ஆ. வெங்கடேசன், ரேவதி ராஜன், பி. ராமமூா்த்தி, ஆா். கணேஷ் மற்றும் காத்திருப்பு உறுப்பினா் எஸ்.எம். பாலசுப்ரமணியன் ஆகியோா் கலந்துக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.