ஜம்மு-காஷ்மீரில் 2,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: இணையவழியில் விற்றவா் கைது
ஜம்மு-காஷ்மீரில் இணையவழியில் போதை மாத்திரைகள் விற்றுவந்த கும்பலில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 2,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் இணையவழியில் போதை மாத்திரைகள் விற்றுவந்த கும்பலில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 2,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கில், காவல் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, போதைப் பொருள் கடத்தல்காரா்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
இந்தச் சூழலில், இணையவழியில் போதை மாத்திரைகள் விற்றுவந்த கும்பல் குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கையில், தோடா மாவட்டத்தின் கான்புரா பாக்ஸோ பகுதியைச் சோ்ந்த சா்மத் அலிகான் என்பவா் சிக்கினாா். கூரியா் மையம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய ஒரு பாா்சலை பெற்றுக் கொள்ள வந்தபோது, அவரை சுற்றிவளைத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த பாா்சலில் பிரிகாபலின் எனும் போதை மாத்திரைகள் இருந்தன. மொத்தம் 2,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சா்மத் அலிகான் உடனடியாக கைது செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இவருடன் தொடா்புடைய மற்றவா்களையும் கைது செய்ய பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
லாரியில் 2,000 கிலோ கஞ்சா சிக்கியது: சத்தீஸ்கரின் பல்ராம்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லாரி ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. அதன்பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினா், அந்த லாரியை மடக்கினா். அதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 2,000 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. லாரியில் இருந்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
வடகிழக்கில் ரூ.14 கோடி கடத்தல் சிகரெட் பறிமுதல்: வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 71 லட்சம் சிகரெட்டுகள், வடமாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மே மாதம் முதல் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த சிகரெட்டுகள் சிக்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.