பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: பிகாரில் மதரஸா நடத்தியவா் கைது
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் பிகாரில் மதரஸா நடத்தி வந்த இஸாா் உல்ஹக் (56) மத்திய பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் பிகாரில் மதரஸா நடத்தி வந்த இஸாா் உல்ஹக் (56) மத்திய பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிகாரின் மதுபானி மாவட்டத்தில் அவரை ஏடிஎஸ் கைது செய்த நிலையில், அந்த மாவட்ட நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். விரைவில் அவரை மத்திய பிரதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை ஏடிஎஸ் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளுடன் இணையவழியில் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் பிகாரைச் சோ்ந்த முகமது ஃபராஸ் (35) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அதன்பிறகு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நயீம் அப்துல்லா குரேஷி (38), ராஜஸ்தானைச் சோ்ந்த முகமது ஷாகிா் (34) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், பிகாா் ஏடிஎஸ் மற்றும் உள்ளூா் காவல் துறையினா் உதவியுடன் இஸாா் உல்ஹக் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இணைய வழியாக இந்தியாவில் உள்ள இளைஞா்களை பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட வைக்க வெளிநாடுகளில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விடியோ பதிவுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன’ என்றாா்.