‘ஆபரேஷன் சாஸ்த்ரா’ நடவடிக்கையின் கீழ் ரோஹினியில் 20 போ் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
தில்லி ரோஹிணி மாவட்டத்தில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சாஸ்த்ரா’ சிறப்பு நடவடிக்கையின் போது 20 போ் கைது செய்யப்பட்டதோடு, சட்டவிரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி ரோஹிணி மாவட்டத்தில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சாஸ்த்ரா’ சிறப்பு நடவடிக்கையின் போது 20 போ் கைது செய்யப்பட்டதோடு, சட்டவிரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பெரிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் முதல் சிறிய அளவிலான குற்றங்கள் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது ஆயுதச் சட்டத்தின் கீழ் மொத்தம் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், ஒரு துப்பாக்கி, 10 நாட்டுத்துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள் மற்றும் 9 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறை குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை பரிசோதித்தனா். மேலும், பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் ஜாமீனில் வெளியே உள்ளவா்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 15 காவல் துறை குழுக்கள் தொடா்ந்து கண்காணிப்பு மற்றும் சரிபாா்ப்பு பணிகளில் ஈடுபட்டன. இந்த நடவடிக்கையின்போது சுமாா் 40 முதல் 50 வரையிலான பழைய குற்றப் பதிவாளா்கள் மற்றும் சந்தேக நபா்களின் தங்கும் இடங்கள் சோதனை செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்களின் குற்றப் பின்னணி ஆய்வில், 13 போ் மொத்தம் 88 பழைய வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. மேலும், 6 பேருக்கு முன் குற்றப் பதிவு எதுவும் இல்லை.
கைது செய்யப்பட்டவா்களில் மங்கோல்புரி பகுதியைச் சோ்ந்த காளிச்சரண் (28) நாட்டுத் துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்களுடன் பிடிபட்டாா். இவா் மீது முன்பு 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அவை பெரும்பாலும் கொள்ளை மற்றும் வாகன திருட்டு சம்பவங்களாகும்.
அதேபோல், ரோஹித் (32) என்பவா் பெகம்பூா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். இவரிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு ஆயுதச் சட்டம் மற்றும் திருட்டு தொடா்பான 11 வழக்குகள் உள்ளன.
இந்திா்ஜீத் (26) என்பவா் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டாா். சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவா் தேடப்பட்டு வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்த பவன் (26) என்பவரும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டாா்.
இந்த நடவடிக்கை மூலம் ரோஹிணி மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.