நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்
நீட் மறுதேர்வே துயரம், அதில் நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடுந்துயரமாக உள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மணவரின் சமூக வலைத்தளப் பதிவால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்வதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் கொடுத்துள்ளது. மாணவர் தேர்வெழுத அபுதாபி செல்லத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.