நீட் மறுதேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்! என்டிஏ விளக்கம்
நீட் மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாகப் பரவிவரும் வதந்திகள் குறித்து...
நீட் மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாகப் பரவிவரும் வதந்திகளுக்கு தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதியில் இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து, நடந்து முடிந்த நீட் 2026தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 21 ஆம் தேதியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 21-ல் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
ஆனால், நீட் மறுதேர்வு ஒத்திவைப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, "இளநிலை நீட் 2026 தேர்வுக்கு இன்னும் 3 நாள்களே உள்ளன. ஒவ்வொரு தேர்வரும் கடினமாக உழைத்தீர்கள். இப்போது நீங்கள் தயாராகி விட்டீர்கள். உங்கள் முயற்சியை நம்ப வேண்டிய நேரமிது.
திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும். தேர்வு ஒத்திவைப்பு பற்றிய வதந்திகளால் திசைதிருப்பப்பட வேண்டாம். தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ தகவல்கலை மட்டுமே நம்புங்கள்.
மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், பாதுகாப்பு அமைப்புகளுடனான ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பான மற்றும் நியாயமான தேர்வுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளனர்.
Is NEET UG 2026 Re-Exam Postponed?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.