லத்தூர்: சந்தன மரத் திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேர் கைது
லத்தூரில் சந்தன மரத் திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லத்தூரில் சந்தன மரத் திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சந்தன மரத் திருட்டு வழக்கில் தொடர்புடைவர்களாக கருதப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக மாவட்ட போலீஸ் தொடங்கிய சிறப்பு அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர் விஷால் சஹானே தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில், அவுசா வட்டத்தில் உள்ள பெல்குண்ட் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தின் முக்கியப் பகுதியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட அந்த சந்தனக் கட்டையின் மதிப்பு சுமார் 5,000 ரூபாய் ஆகும்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மூன்று குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். எனினும், இந்த வழக்கில் நிதின் கோரக் ராவத் (48) மற்றும் ராமச்சந்திரா என்கிற ராம் தர்மராஜ் மாலி (50) ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
தற்போது இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களது வீடுகளில் வைத்து போலீஸாரால் காவலில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறினர்.
Two men have been arrested nearly 11 years after they were named in a case involving the alleged theft of sandalwood in Maharashtra's Latur district, police said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.