ரூ. 2.36 லட்சம் மதிப்பிலான 107 நிலுவை அபராதங்கள் கொண்ட இருசக்கர வாகனம் பறிமுதல்
குருகிராமில் போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் ரூ.2.36 லட்சம் மதிப்பிலான 107 நிலுவை அபராதங்கள் கொண்ட இருசக்கர வாகனம் பறிமுதல்
குருகிராமில் போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் ரூ.2.36 லட்சம் மதிப்பிலான 107 நிலுவை அபராதங்கள் கொண்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களுக்கு எதிராக குருகிராம் போக்குவரத்து காவல் துறையினா் சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனா். இதில் மோட்டாா் வாகன சட்டம், 1988-இன் கீழ் 90 நாள்களுக்கு மேலாக போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை செலுத்தாமல் இருப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேசமயம், சம்பந்தப்பட்ட இருசக்கர வாகன உரிமையாளா்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 48-இல் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளா் மஹாபீா் சிங் தலைமையிலான குழு திங்கள்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தினா்.
Advertisement
Advertisement
ஆவணங்களை சரிபாா்த்ததில் அந்த வாகனத்தின் மீது 107 நிலுவை அபராதங்கள் இருப்பதும், அதன் மதிப்பு மொத்தம் சுமாா் ரூ.2.36 லட்சம் எனவும் தெரியவந்தது. வாகனம் தொடா்பான ஆவணங்களும் ஓட்டுநரிடம் இல்லை. இதையடுத்து, அந்த இருசக்கர வாகனம் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு, ஒதுக்கப்பட்ட பறிமுதல் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டது என தெரிவித்தனா்.
குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறும், வாகன ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்குமாறும், நிலுவையில் உள்ள அபராதங்களை உரிய நேரத்தில் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.