பணமுறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஜாக்குலின் பெர்னாண்ஸ் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது பற்றி..
ரூ. 200 கோடி பணமுறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ஸ் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ. 200 கோடி பணமோசடி வழக்கில், விசாரணை நீதிமன்றம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி அதுல் எஸ். சந்துர்கர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா அறிவித்தார். மேலும், விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு மற்றொரு நீதிபதிகள் அமர்வு முன் பட்டியலிடுமாறும் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
சட்டப்படி தகுந்த நிவாரணத்தைப் பெறுவதற்கான உரிமையுடன், இந்தச் சிறப்பு அனுமதி மனுவைத் திரும்பப்பெற மனுதாரரின் (பெர்னாண்டஸ்) வழக்குரைஞர் அனுமதி கோரியதாக நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
மனுதாரர் கோரியவாறு, உரிய நிவாரணத்தைப் பெறுவதற்கான உரிமையுடன் மனுவைத் திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மோசடி நபர் என்று கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் 15 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் மே 30 அன்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து நடிகை உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Supreme Court on Thursday permitted Bollywood actor Jacqueline Fernandez to withdraw her plea challenging a Delhi court order to frame charges against her in a Rs 200 crore money laundering case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.