தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
தமிழக சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து...
தமிழக சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றபோதிலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை 118 இடங்களைப் பெறவில்லை.
இதனையடுத்து, மே 13 ஆம் தேதியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அதிமுகவில் அதிருப்தியடைந்து வெளியேறிய எம்எல்ஏ 25 பேரும் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாக கே.கே. ரமேஷ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் வி. மோகனா அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எந்த நம்பகமான ஆதாரமும் இல்லாத தெளிவற்ற, தவறான குற்றச்சாட்டுகளைக் கொண்டதாகப் புகார் மனு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Supreme Court dismisses plea seeking probe into May 13 trust vote in Tamil Nadu Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.