FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!

செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகியது பற்றி...

Updated On : 31 ஜூலை 2026, 12:19 pm IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2021-2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில், திமுக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருந்தவா் செந்தில் பாலாஜி. இந்த காலகட்டத்தில், டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா்களுக்கு உரிமம் வழங்கியது, ஊழியா்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் செய்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன் உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் அவசர வழக்காக செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் உள்ள நீதிபதி மோகனா வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக வழக்கறிஞராக இருந்தபோது செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகியுள்ளதால், தான் விசாரணை அமர்வில் இருப்பது சரியாக இருக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்சி ஆகியோர் மட்டும் முன் பிணை கோரிய மனுவை விசாரிக்கவுள்ளனர்.

summary

Supreme Court judge recuses himself from the Senthil Balaji case!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments