முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் மகன் மீது அவதூறு: வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!

அவதூறு கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. வருத்தம் தெரிவித்தது தொடர்பாக..

Updated On : 25 ஜூன் 2026, 4:18 pm IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மகன் கார்த்திகேயா சிங் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின், ஜஹுபா என்ற இடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசும்போது, அப்போதைய மத்திய பிரதேச முதல்வரும், அமைச்சருமான சிவராஜ் சிங் சௌகான், அவரது மகள் கார்த்திகேயா சௌகான், அவரது குடும்பத்தினருக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு உள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக, கார்த்திகேயா சிங் போபால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து சம்மன் மற்றும் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கார்த்திகேய சிங்கை குறிப்பிடும் வகையில் பேசவில்லை எனவும், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Congress MP Rahul Gandhi has filed an application before the Madhya Pradesh High Court expressing regret for his allegedly defamatory statement about Union Minister Shivraj Singh Chouhan's son Kartikeya Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments