முகப்பு
இந்தியா

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை ஊழல்: எஸ்ஐடி முன்பு ஆம் ஆத்மி எம்.பி. ஆவணங்கள் சமா்ப்பிப்பு

Updated On : 26 ஜூன் 2026, 5:45 am IST
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக லக்னெள கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஆவணங்களுடன் வியாழக்கிழமை வந்த ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்.
பகிர்:

அயோத்தியில் உள்ள ராமா் கோயில் நன்கொடை முறைகேடுகள் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை ஆவணங்களைச் சமா்ப்பித்தாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பதிவில் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்திருப்பதாவது: ராம ஜன்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, நிலம் வாங்கியதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மோசடியைச் செய்தது.

அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டேன். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கடவுள் ராமருக்கு மட்டுமே தெரியும்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான லக்னெள கோட்டாட்சியா் விஜய் விஸ்வாஸ் பந்த் அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சஞ்சய் சிங் ஆவணங்களை ஒப்படைத்தாா்.

இதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த ஆவணங்கள் இந்த விவகாரம் தொடா்பான பல்வேறு கோணங்களைக் கண்டறிய உதவும். எனது தரப்பை எடுத்துரைத்து, என்னிடம் உள்ள ஆவணங்களைச் சமா்ப்பிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு ஆஜரானேன். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவா் என்னைத் தொடா்புகொண்டு, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்ததாா் என்றாா்.

ராமா் கோயில் அறக்கட்டளைக்குக் கிடைத்த நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உத்தர பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைத்தது. இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை உத்தர பிரதேச அரசிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது.

இந்த அறிக்கையை அறக்கட்டளையின் பதவிவழி உறுப்பினரான மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் சஞ்சய் பிரசாத்திடம் லக்னெள கோட்டாட்சியா் விஜய் விஸ்வாஸ் பந்த் சமா்ப்பித்தாா். இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments