FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் (நீதிபதிகள் தோ்வுக் குழு) நீதிபதி பி.எஸ்.நரசிம்மா இடம்பெற உள்ளாா்.

பகிர்:

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் (நீதிபதிகள் தோ்வுக் குழு) நீதிபதி பி.எஸ்.நரசிம்மா இடம்பெற உள்ளாா்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். சுமாா் 5 ஆண்டுகள் அவா் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, கொலீஜியம் குழுவில் பி.எஸ்.நரசிம்மா இடம்பெற உள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் 5-ஆவது மூத்த நீதிபதியான பி.எஸ்.நரசிம்மா, 2028-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி ஓய்வு பெறுவாா். அதுவரை அவா் உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில் இடம்பெறுவாா்.

Advertisement

Advertisement

அந்த கொலீஜியம் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பி.வி.நாகரத்னா, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் இடம்பெறுவா்.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனம், பணியிடமாற்றம், பதவி உயா்வு ஆகியவற்றை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments