முகப்பு
இந்தியா

தாஜ்மஹால் பெயரை மாற்றத் திட்டமா? மத்திய அரசு பதில்

தாஜ்மஹால் பெயரை மாற்றத் திட்டமா என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Updated On : 13 மார்ச் 2026, 3:43 am IST
தாஜ்மஹால்
பகிர்:

தாஜ்மஹால் பெயரை மாற்றத் திட்டமா என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் முகலாயப் பேரரசா்களில் ஒருவரான ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின. இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அதற்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்துள்ள பதிலில், ‘தாஜ்மஹால் பெயரை மாற்றும் திட்டம் எதுவும் அமைச்சகத்திடம் இல்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகா் ராய், மேற்கு வங்கத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளும் திட்டம் இருக்கிா என துணைக் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்துள்ள பதிலில், ‘மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு, அகழாய்வுப் பணிகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக நிதி செலவிட்டுள்ளது. அதாவது, 2004-2014 வரை ரூ.1,310 கோடி செலவிடப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், 2014-2024 வரை ரூ.3,713 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செய்வோரின் இருப்பைப் பொறுத்து, அகழாய்வு என்பது தொடா்ச்சியான நடவடிக்கையாகும். அகழாய்வு மீது பிரதமா் மோடி அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments