ஸ்லீப்பர் ரயிலில் செல்வோர் கவனிக்க.. நடுப் படுக்கையை பயன்படுத்த ரயில்வே விதிமுறை!
ஸ்லீப்பர் ரயிலில் செல்வோர் நடுப் (மிடில்) படுக்கையை பயன்படுத்த ரயில்வே விதிமுறைகள் வழங்கியுள்ளதைப் பற்றி...
படுக்கை வசதிகளைக் கொண்ட ஸ்லீப்பர் ரயில்களில் இருக்கும் மிடில் பெர்த் (நடுப் படுக்கை)யை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான புதிய விதிமுறைகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில்களில் செல்வது என்பது பலருக்கும் அலாதியான பிரியம்தான். நீண்டதூரப் பயணங்களுக்கு பேருந்துகள், கார்களில் செவதைவிட அதிகளவில் சொகுசானப் பயணத்துக்கும், விமானக் கட்டணத்தைவிட குறைவான கட்டணம் என்பதாலும், கழிப்பறை வசதி, ரயில் உள்ளேயே நடந்துகொள்ளும் வசதிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை கிடைப்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
அதேநேரத்தில், திடீரென டிக்கெட் பதிவு செய்யமுடியாமல் போவது, 120 நாள்களாக இருந்த முன்பதிவு தற்போது 60 நாள்களாகக் குறைக்கப்பட்டது போன்றவை பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கின்றன. அதுமட்டுமன்றி, தத்கல் பதிவிலும் சில நேரங்களில் ரெக்ரெட் - வருந்தச் செய்வது, பயணத்துக்கு எட்டு மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திருப்பி செலுத்தப்படாது என்ற பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதேபோல, ஸ்லீப்பர் ரயில்களின் சாதாரண ஸ்லீப்பர், 3ஏ ஏசி உள்ளிட்ட பெட்டிகளில் டிக்கெட் கிடைப்பதும் அவ்வளவு எளிதானதல்ல. இவ்வாறான சூழலில் டிக்கெட் கிடைத்தாலும் பகல் நேரங்களில் நீண்ட தூரப் பயணங்களில் நாம் படுக்கை வசதியைப் பயன்படுத்த முடியாது.
குறிப்பாக ரயில் முன்பதிவுகளில் நமக்கான லோயர் பெர்த், மிடில் பெர்த், அப்பர் பெர்த் வசதி அதில் தேர்வாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும், முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனுடையோருக்கு லோயர் பெர்த் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன.
கீழ்ப் படுக்கை போட்டாலும், பெரியவர்கள் கேட்பார்கள் என்று நினைத்து இளைஞர்கள் பலரும் கீழ்ப் படுக்கையையும் நடுப் படுக்கையையும் விரும்புவதில்லை. ஆனால், நடுப்படுக்கையை அனைத்து வகை மக்களும் பயன்படுத்துகின்றனர்.
மூன்று பேருக்கான இருக்கையில் பகல் நேரங்களில் மூவரும் நடுப்படுக்கைகளில்தான் அமர்ந்து வருவார்கள். ஆனால், நடுப்படுக்கையை முன்பதிவு செய்துவிட்டேன் எனக் கூறி அவர்களை விரட்டி விடக்கூடாது என்பதற்காக நடுப் படுக்கை பயணிகளுக்கு புதிய விதிமுறைகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட ஏசி, ஏசி அல்லாத ஸ்லீப்பர் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் நடுப்படுக்கையைப் பயன்படுத்தும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் உறங்குவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாத வகையில் இருக்கையைப் பயன்படுத்த வேண்டும்.
தென்னக ரயில்வேயின் புதிய விதிமுறைகள்
• இரவு 10 முதல் காலை வரை மட்டுமே நடுப்படுக்கையை நீங்கள் தூங்குவதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
• காலை 6 மணி முதல் இரவு 10 வரை மற்ற பயணிகள் உட்காரும் வகையில் கட்டாயம் நடுப் படுக்கை மடக்கி வைக்க வேண்டும்.
• முதியோர்கள், கர்ப்பிணி அல்லது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோர் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தூங்க விரும்பினால் மட்டுமே அதிக நேரம் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
• நடுப்படுக்கை மடக்காமல், மற்றப் பயணிகளுக்கு சிரமம் தரும் வகையில் யாரும் நடந்துகொண்டால், டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
The middle berth is meant for sleeping between 10:00 PM and 6:00 AM only — during the day it must remain folded to ensure comfortable seating for all passengers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.