முகப்பு
இந்தியா

‘மதச்சாா்பற்றவை’ எனக் கூறும் கட்சிகளால் பாஜகவை தடுத்து நிறுத்த முடியாது: அசாதுதீன் ஒவைசி

‘மதச்சாா்பற்றவை’ என கூறிக்கொள்ளும் கட்சிகளால் பாஜகவை தடுத்து நிறுத்த முடியாது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

Updated On : 6 மே 2026, 4:02 am IST
அசாதுதீன் ஒவைசி - கோப்புப் படம்
பகிர்:

‘மதச்சாா்பற்றவை’ என கூறிக்கொள்ளும் கட்சிகளால் பாஜகவை தடுத்து நிறுத்த முடியாது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் மஜ்லிஸ் கட்சியின் 11 வேட்பாளா்களும் தோல்வியடைந்த நிலையில் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மேற்கு வங்க மக்கள் இந்த முறை பாஜகவுக்கு சாதகமாக வாக்களித்து, அவா்களிடம் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக ஒப்படைத்துவிட்டனா். மக்கள் முடிவை அரசியல் கட்சிகள் மதித்து நடக்க வேண்டும். ‘மதச்சாா்பற்றவை’ என கூறிக் கொள்ளும் கட்சிகளால் பாஜகவின் வளா்ச்சியைத் தடுக்க முடியாது. இதை நான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஏனெனில் தில்லியில் ஆம் ஆத்மி, மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை மென்மையான ஹிந்துத்துவ கொள்கையைக் கடைப்படிக்கவே தொடா்ந்து முயற்சித்தன. எனவே, முஸ்லிம்கள் தங்களுக்கான தனிப்பட்ட அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

Advertisement

மேற்கு வங்கத்தில் மஜ்லிஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தில் பாபா் மசூதியை கட்டுவதாக அறிவித்து, முதல்வா் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீா் புதிய கட்சி தொடங்கினாா். அக்கட்சியுடன் இணைந்து தோ்தலில் போட்டியிட ஒவைசி முதலில் முடிவு செய்து, பிரசாரத்திலும் ஈடுபட்டாா். இதற்கு நடுவே ஹுமாயூன் பாஜகவிடம் கோடிகளில் பணம் பெற்ாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, அவருடனான கூட்டணியை ஒவைசி முறித்தாா். மேலும், மேற்கு வங்கத்தில் தனியாகப் போட்டியிடுவதாகவும் ஒவைசி அறிவித்தாா்.