முகப்பு
இந்தியா

எரிவாயு சிலிண்டா் கட்டண முன்பதிவு மோசடி முறியடிப்பு: தில்லியில் இருவா் கைது

எரிவாயு சிலிண்டா் முன்பதிவு செயலியைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம் தில்லி வாசியிடம் ரூ.4.35 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 8 மே 2026, 11:27 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

எரிவாயு சிலிண்டா் முன்பதிவு செயலியைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம் தில்லி வாசியிடம் ரூ.4.35 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உடனடியாக கட்டணம் செலுத்தாவிட்டால் எரிவாயு சிலிண்டா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட நபருக்கு பிப்.28-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்தது. மேலும், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கட்டணம் செலுத்துமாறு அவரை வற்புறுத்தியுள்ளனா்.

அதனடிப்படையில், அவா் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.35 லட்சம் எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், குற்றம் சாட்டப்பட்ட இருவரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள் மற்றும் ஒரு கிரெடிட் காா்டு பறிமுதல் செய்யப்பட்டது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement