51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!
புதிதாக நியமிக்கப்பட்ட 51,000 அரசுப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நியமன ஆணை வழங்கியது குறித்து...
அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொளி காட்சியின் வாயிலாக, பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை வழங்கினார்.
'ரோஸ்கார் மேளா' என்று அழைக்கப்படும் வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, ரோஸ்கார் மேளா என்னும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட 18 வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஏறக்குறைய 12 லட்சம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். ஏனென்றால், 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களுடைய பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியாவுக்கான முன்னெடுப்பில் நீங்கள் அனைவரும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றப் போகிறீர்கள். இந்த சாதனைக்காக, உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பணிநியமன ஆணைகளைப் பெற்ற இளைஞர்கள், ரயில்வே, உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், நிதி, உயர்கல்வி போன்ற நாட்டின் அனைத்து துறைகளிலும் பணியாற்ற உள்ளனர். மேலும், நாடு முழுவதும் 47 இடங்களில் இந்த 'ரோஸ்கார் மேளா' இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
On Saturday, Prime Minister Narendra Modi distributed appointment orders via video conferencing to more than 51,000 youths newly joining various government departments.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.