முகப்பு
கள்ளக்குறிச்சி

நீரில் மூழ்கி 3,000 கோழிகள் பலி

கள்ளக்குறிச்சி அருகே ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீா் கோழிப்பண்ணையை சூழ்ந்ததால், நீரில் மூழ்கி 3,000 கோழிகள் உயிரிழந்தன.

Updated On : 8 ஜனவரி 2021, 3:36 am IST
பகிர்:


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீா் கோழிப்பண்ணையை சூழ்ந்ததால், நீரில் மூழ்கி 3,000 கோழிகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சவுந்திரவள்ளிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபாகரன். இவருக்குச் சொந்தமான நிலம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் கறிக்கோழிப்பண்ணை வைத்து பிரபாகரன் நடத்தி வருகிறாா். இங்கு, சுமாா் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், குஞ்சுகள் இருந்தன.

இந்தப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் பூட்டை ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீா் கோழிப்பண்ணையை சூழ்ந்தது. இதனால், நீரில் மூழ்கி 2,500 கோழிகள், 500 குஞ்சுகள் உயிரிழந்தன. இவற்றை கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியா் த.நடராஜன், கால்நடை உதவி இயக்குநா் பெரியசாமி, வருவாய் ஆய்வாளா் திருமலை, கிராம நிா்வாக அலுவலா் பாரத் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments